மாற்றுத்திறன் மாணாக்கருக்கு இரு மடங்காக உயரும் கல்வி உதவித்தொகை - முதலமைச்சர் அதிரடி உத்தரவு

x

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கானஉதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஆறாயிரம் ரூபாயாகவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாயாக, இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பட்டப் படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்க்கான கல்வி உதவித் தொகை 12 ஆயிரம் ரூபாயாக, இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற் கல்வி, பட்ட மேல்படிப்பு படிப்பவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து ஆணை பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்