``முதல்வருக்கு எதிராக அமைச்சர் பேச்சு.. பதவி விலகுங்கள்’’ - கொதிக்கும் அன்புமணி

x

நாடுமுழுவதும் சட்டம் கொண்டு வரப்பட்டால்தான், மதுவிலக்கு சாத்தியமாகும் என்ற அமைச்சர் ரகுபதியின் கருத்து கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும், தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும், அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுவதாக தெரிவித்துள்ளார். தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர், மதுவிலக்கை தமிழ்நாட்டில் மட்டும் செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பது தோல்வியின் வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளார். திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்துகிறேன்.


Next Story

மேலும் செய்திகள்