பள்ளி, கல்லூரி மாணவர்களோடு உறுதிமொழி ஏற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு பெருந்திரள் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியபோது, தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் தடுப்பதற்கு அதை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தவர், தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்த 17, 481 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும், போதை பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் அதிகாரிகள் 33 கோடியே 28 லட்சத்து 13,200 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
Next Story