மேடையில் அமைச்சர் உதயநிதி வைத்த கோரிக்கை | Minister Udhayanidhi
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை தொடங்கி, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, யானைகவுனி பகுதியில் அமைந்துள்ள கல்யாணபுரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 44.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 புதிய குடியிருப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் நல சங்கம் இருப்பதைப்போன்று, பொதுமக்கள் ஒரு சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் தேவைகளை மாநகராட்சிக்கு தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Next Story