அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பளிக்கிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில், ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கையை சுட்டிக்காட்டி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், நீதிமன்றமே ஒரு மருத்துவரை நியமித்து உடல் நிலை குறித்து ஆய்வு செய்யலாம் என வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
Next Story