அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - நீதிமன்றத்தில் ED அடுத்த மூவ்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல்களை கேட்டு, அமலாக்கத் துறை சார்பில், சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, பணி நியமனங்கள் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் ஒரு வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தும், மற்ற வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல் துறை தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை கேட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதி ஜி.ஜெயவேல், வரும் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.