மீண்டும் `MLA' - வரப்போகும் அறிவிப்பு

x

பொன்முடி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியாகியுள்ள நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2006 முதல் 2012-ஆம் ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 50 லட்ச ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்விளைவாக அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பொன்முடி இழக்க நேர்ந்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில், பொன்முடிக்கு எதிரான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்களுக்கு கிடைக்கப்பெற்று உள்ளது. எனவே, அவர் எம்.எல்.ஏ-வாக தொடர்வதற்கான புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்