திடீரென கொந்தளித்த அமைச்சர்... அடுத்த சில நொடிகள்... பரபரப்பு காட்சி
சென்னை வளசரவாக்கத்தில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், சலசலப்பு ஏற்படுத்தியவர்களை அமைச்சர் முத்துசாமி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டில் குடியிருக்கும் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று கருத்துகளையும் , குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது, நடிகர் ராஜேஷ், தமது கருத்துகளை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அமைச்சரின் அருகே நின்றிருந்த சிலர், சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால், கோபமடைந்த அமைச்சர், அவர்களை கடிந்து கொண்டதுடன், சிறிது நேரம் பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அமைச்சர் முத்துசாமி, இயல்பு நிலைக்கு திரும்பினார்.
Next Story