"தமிழ்நாட்டில் கூடுதலாக 1000 இடங்களில்.." அமைச்சர் சொன்ன புது அப்டேட் | Minister .Meyyanathan
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும்
பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய பேராசிரியர் சுல்தான்
இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
என்றார். கடந்த 3 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன்
திட்டம் எதற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை
என்றார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம்
இடங்களில் பசுமை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பசுமைத் தமிழகம்
திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்பட்டு வருகிறது என்றார். திருச்சியிலும், மதுரையிலும் ஒரு கோடி மரங்கள் நடப்பட்டு வருகிறது என்றார். வடசென்னை பகுதில் காற்று தரத்தை கட்டுப்படுத்த 17 தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஹெக்டேரில் 25 ஆயிரம் மரங்கள்
நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தூத்துக்குடியில் 200 ஏக்கர்
பரப்பளவில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்றார்.