மதிமுக MLA காரை நிறுத்தி சோதனை..! மேயர், மற்ற எம்எல்ஏக்களுக்கு சல்யூட்.. போலீசாரின் செயலால் சர்ச்சை
அரசு நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மதிமுக எம்எல்ஏவின் காரை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் காரை, காவல்துறையினர் மறித்து சோதனையிட்டனர். இதனிடையே திமுக கொடியுடன் வந்த திமுக எம்எல்ஏக்களின் கார்கள், மேயர் , துணை மேயரின் கார்களை சோதனையிடாமல், காவல்துறையினர் சல்யூட் அடித்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story