"மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன்" - மதிமுக வேட்பாளர் துரை வைகோ தீவிர பிரசாரம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர், காந்தி மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து சென்று, தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பேசிய துரை வைகோ, மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும், வியாபாரிகள் சங்கங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதி அளித்தார்.
Next Story