அதிமுக கவுன்சிலர்களுக்கு தடை விதித்த மேயர் - கோவை கூட்டத்தில் பரபரப்பு
கோவை மாமன்ற கூட்டத்தில் மேயர் கல்பனாவை கண்டித்து, 3 அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 1ம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துவோருக்கு ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, 3 அதிமுக கவுன்சிலர்களையும் வெளியேற்ற உத்தரவிட்ட மேயர், கவுன்சிலர் பிரபாகரனை, 2 கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தார். வெளியேற்றப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள், மாமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுவரை 300 கோடி ரூபாய் வரி வசூலித்துள்ள நிலையில், 100 வார்டுகளிலும் எந்த புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.
Next Story