இந்தியாவிலேயே முதல் முறையாக.. அதுவும் இலவசமாக.. அமைச்சர் சொன்ன தகவல்

x

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 246 பேருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் மக்களுக்கு அனைத்துவிதமான மருத்துவ சேவைகளும் கிடைப்பதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரித்தல் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், அனைத்து துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், மாரடைப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு 'கோல்டன் ஹவர்' என கூறப்படும் நேரத்தில் வழங்கப்படும் மருத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்