லைம்லைட்டுக்கு வந்த மன்மோகன் சிங் - கடும் நெருக்கடியில் தேர்தல் கமிஷன்
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய கருத்துகளை திரித்து இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியிருப்பதாக விசிக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story