மம்தாவை ஆட்டம் காண வைத்த சந்தேஷ்காளி விவகாரம்... திரிணாமுல் எடுத்த அதிரடி முடிவு
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில், பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை, கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்த நிலையில், ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கொல்கத்தாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் டெரெக் ஓ பிரையன், ஷாஜகான் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Next Story