நாட்டை நடுங்கவிட்ட ரயில் கோரம்.."பாஜக அரசுக்கு இந்த மூன்றே குறி" - இறங்கி அடித்த மம்தா

x

நாட்டை நடுங்கவிட்ட ரயில் கோரம்.."பாஜக அரசுக்கு இந்த மூன்றே குறி" - இறங்கி அடித்த மம்தா

ரயில்வே அமைச்சகம் பயணிகள் வசதிகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து குறித்து பேசிய மம்தா பானர்ஜி, ரயில்வே ஊழியர்கள் பற்றி ரயில்வே அமைச்சகத்திற்கு கவலையில்லை, அவர்களும் சிக்கலில் உள்ளார்கள், அவர்கள் பழைய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது என விமர்சித்தார். மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு துணை நிற்பதாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு தேர்தலை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது எனவும் ஹேக் செய்வது எப்படி? சூழ்ச்சி செய்வது எப்படி..? தேர்தலில் தில்லுமுல்லு செய்வது எப்படி என்பதில் மட்டுமே மும்முரமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்