காங். தலைவர் சர்ச்சை பேச்சு - மம்தா பானர்ஜி பதிலடி
மேற்குவங்க மாநிலம் தும்லுக் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் காங்கிரசுடனோ, சிபிஎம் கட்சியுடனோ கூட்டணியில் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரும்போது, வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தாலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தா பானர்ஜியை நம்ப முடியாது என்றும், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் சென்றுவிடக்கூடும் என்றும் விமர்சித்திருந்தார். ஆனால், தன்னுடைய பேச்சை அகில இந்திய அளவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இந்தியா கூட்டணி தன்னுடைய சிந்தனையில் உதித்தது என்ற அவர், இந்தியா கூட்டணியில் தாங்கள் அங்கம் வகிப்பதாகவும், தேசிய அளவில் இனியும் ஒன்றாக இருப்போம் என்றும் கூறினார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சியின் மேற்கு வங்க பிரிவு, பாஜகவுடன் கைகோர்த்து, அவர்களுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் காங்கிரசையும், சிபிஎம் கட்சியையும் கணக்கில் கொள்ள வேண்டாம் என்றார்.