மருத்துவர்களுடன் பேச்சு - ம‌ம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி | Mamata Banerjee

x

பேச்சுவார்த்தையை நேரலை செய்ய மறுப்பு தெரிவித்த‌தால், மேற்கு வங்க முதல்வருடனான பேச்சுவார்த்தையை மருத்துவர்கள் 2வது முறையாக புறக்கணித்துள்ளனர்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மேற்கு வங்க முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்த நிலையில், மருத்துவர்கள் போராடும் இடத்திற்கு நேரில் சென்று பேசிய ம‌ம்தா பானர்ஜி, தனது வீட்டுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, தனது வீட்டு வாசலில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ம‌ம்தா பானர்ஜி காத்துக்கிடந்தார். நேரில் சென்ற மருத்துவர்கள் குழுவினர், நேரலை செய்யும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதில்லை என்று, முதல்வரின் வீட்டுக்குள் செல்லாமல் கொட்டும் மழையில் காத்துக்கிடந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்