"பக்கோடாவும், ஜிலேபியும் வைத்திருக்கிறார்கள்".. பட்ஜெட்டில் இல்லாத பெயர்கள்.. மல்லிகார்ஜுன கார்கே

x

மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பட்ஜெட்டில் இரு மாநிலங்கள் மட்டும் பயன்பெற்று இருப்பதாகவும், இரு தட்டுகளில் மட்டும் பக்கோடாவும், ஜிலேபியும் வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது, இதுபோன்ற பட்ஜெட்டை வாழ்நாளில் பார்த்ததே இல்லை என விமர்சித்தார். அப்போது இந்தியா பட்ஜெட்தான் வேண்டும் பாஜக கூட்டணி பட்ஜெட் வேண்டாம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெயரை கூட பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை எனவும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


Next Story

மேலும் செய்திகள்