மக்களை கவர்வதற்கு புது ட்ரிக்கை கையில் எடுத்த மதுரை மேயர்! - சர்ச்சையான பிரச்சாரம்

x

பாதுகாக்கப்பட்ட பறவை இனமான கிளியை, வாக்கு சேகரிப்புக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பயன்படுத்தியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி, கிளிகளை வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரை நாடாளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் அவரது கணவர் பொன்வசந்த் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட பறவை இனமான கிளியை பயன்படுத்தி பொதுமக்களை கவருவதற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்