தேர்தல் களத்திற்கு ரெடியான காங்., - முக்கிய புள்ளிகள் போடும் புது பிளான்
மத்திய பிரதேச மாநில தேர்தல் குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்தினார்.
மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக ஏற்கனவே அறிவித்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோ பங்கேற்று வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.
Next Story