"கட்டாயம் லீவு...விடுப்பு அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை.." - ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பங்களை பார்வையிட்ட பின் பேசிய அவர், சென்னையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ஐ.பி.எல். போட்டியின் போது விளம்பரம்படுத்துதல், செல்பி பாயிண்ட் உள்ளிட்டவைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.
Next Story