தேர்தல் சோதனை.. களமிறங்கிய ஸ்குவாட்.. காருக்குள் இருந்த மூட்டை..1000 பாக்ஸ்.. காத்திருந்த ட்விஸ்ட்

x

தேர்தல் சோதனை.. களமிறங்கிய ஸ்குவாட்

காருக்குள் இருந்த மூட்டை.. 1000 பாக்ஸ்

திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த ட்விஸ்ட்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் பாண்டிக்கோவில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ஆம்னி பேருந்தில் உரிய ஆவணமின்றி பெட்டி பெட்டியாக எடுத்துசெல்லப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாச்சியர் அனுமதியுடன் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் பட்டாசுபெட்டிகள் ஒப்படைக்கப்பட்டது.

---

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் ஆயிரக்கணக்கான எவர் சில்வர் டிபன் பாக்ஸ் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காக டிபன் பாக்ஸ் கொண்டு செல்லப்படுவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்ததுடன் அதற்கான ரசீதை காண்பித்தனர். இதனை தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

---

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் காரில் சென்ற அதிமுக பிரமுகர் கிருபாகரன் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பண் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.

---

சென்னையில் இருந்து சொகுசு பேருந்தில் அவிநாசி சென்ற ரஹமத்துல்லா என்பவரிடம் இருந்து 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பேருந்தில் இருந்து இறங்கிய ரஹமத்துல்லாவை அழைத்து செல்ல வந்த அரவிந்த் குமார் என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்