பாஜகவுக்கு ஜம்படித்து...காத்திருந்த கட்சிகளுக்கு ஷாக் தந்த சிட்டிங் எம்.பி. நடிகை

x

நடிகையும் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி எம்.பியுமான சுமலதா பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்...

சுமலதா பிரபல நடிகர் அம்பரீஷின் மனைவி ஆவார்... அம்பரீஷ் மாண்டியா தொகுதியில் 3 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்... அவரது மறைவிற்குப் பிறகு 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார் சுமலதா... இம்முறையும் மாண்டியா தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் பாஜக மத சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் அந்தத் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில் சுமலதா பாஜக கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தனது அரசியல் என்றென்றும் மாண்டியாவில் மட்டுமே என்று தெரிவித்த சுமலதா, சுயேச்சையாகப் போட்டியிட்ட போதே தன்னை வெற்றி பெறச் செய்த மண்டியா மக்களை எப்போதும் மறக்க மாட்டேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்