"குடியுரிமை திருத்த சட்டம்" - மேடையில் அடித்து சொன்ன மோடி

x

மேற்குவங்க மாநிலம் பரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது 5 உத்தரவாதங்களை அளிப்பதாக பிரதமர் மோடி மக்களுக்கு உறுதியளித்தார். அதன்படி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீடு நீக்கப்படாது என்றும் தெரிவித்தார். மேலும் ராம நவமியைக் கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், ராமர் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதுதவிர குடியுரிமை திருத்த சட்ட அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்