"இந்திய தேர்தலில் அமெரிக்கா `தகிடுதத்தம்'.." - கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு... தொடை தட்டி கோதாவில் இறங்கிய ரஷ்யா

x

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தலையிட அமெரிக்கா முயற்சி செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது.

மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா ஈடுபடுவதாக, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த சூழலில், ரஷ்யாவும் அமெரிக்காவை விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு குறித்து அமெரிக்காவுக்கு புரிதல் இல்லை என விமர்சித்தார். இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது, இந்தியாவை அவமதிக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் இருக்கும் காரணம், இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் சிக்கலாக்குவதாகும் எனவும் ஜகரோவா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன்னை கொலை செய்ய முயற்சி செய்ததில் இந்தியர்களுக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரையில் அமெரிக்கா நம்பிக்கையான ஆதாரங்களை வெளியிடவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்