புயலை கிளப்பிய கூவத்தூர் பேச்சு... ஐகோர்ட் வரை சென்ற விவகாரம்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு, கூவத்தூர் விவகாரத்தில் சேலம் அதிமுக நிர்வாகி வெங்கடாசலம் தொடர்பாக சில கருத்துகளை கூறினார். இதுதொடர்பாக ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் என வெங்கடாசலம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, ஏ.வி.ராஜுவுக்கு எதிராக வெங்கடாசலம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் வழங்க ராஜுவுக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அவரது பேச்சுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story