தமிழகத்தில் உதயமான புதிய கட்சி
கோவையில் முன்னாள் விசிக நிர்வாகி, சமத்துவ ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவர் 8 ஆண்டுகள் விசிகவில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு விசிகவில் இருந்து விலகிய இவர், தற்போது சமத்துவ ஜனநாயக கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும் இவர், திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
Next Story