இணையத்தில் வைரலாகும் வானதி சீனிவாசன் ஆவேசமாக பேசும் வீடியோ | Vanathi Srinivasan

x

குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என சொல்லும் தி.மு.க.வை ஏன் எதிர்க்கவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை செல்வபுரத்தில் விஸ்வகர்மா சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசும் வீடியோவை தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதில், குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என சொல்லும் திமுகவை ஏன் எதிர்க்க வில்லை எனவும், மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தினை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதை ஏன் கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் விஸ்வகர்மா நிர்வாகிகளிடம் ஆவேசமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்