ஒரே ஹாஸ்பிடலில் தொடரும் அதிரடி - அடுத்தடுத்த நாளில் மிரளவிட்ட அமைச்சர்கள்
திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள கோவை சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவிநாசி பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்தகம், ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம், மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்... மேலும் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். நேற்று அமைச்சர் வேலு ஆய்வு செய்த நிலையில் அடுத்த தினமே அமைச்சர் மா.சுப்பிரமணியமும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
Next Story