"முதல்வர் பதவியை தூக்கி எறியவும் தயார்" - பற்றி எரியும் மேற்கு வங்கம்..நாட்டையே அதிரவிட்ட மம்தாவின் திடீர் முடிவு?
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது, மேற்கு வங்கத்தை மேலும் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது...
கொல்கத்தாவில், இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..
இதைக் கண்டித்து கொல்கத்தா மருத்துவர்கள் தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர்..
இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மேற்கு வங்க அரசு சார்பில் 32 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்த கூட்டம் கூட்டப்பட்டது...
பேச்சுவார்த்தையை நேரலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால், மருத்துவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை....
இதனால், கூட்டத்தில் காலி சேர்களுக்கு மத்தியில் மம்தா அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது...
இந்நிலையில், இது தொடர்பாக உரையாற்றிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்த்த மக்களிடம் தான் மன்னிப்பு கேட்பதாக உருக்கமாக தெரிவித்தார்...
மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயராக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்..
இளம் மருத்துவர்களின் பணி நிறுத்தத்தால், 27 நோயாளிகள் உயிரிழந்ததுடன், 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி அளித்தார்...