கொல்கத்தா விவகாரம் - பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்..

x

கொல்கத்தாவில் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடித‌த்தில், கொல்கத்தா மருத்துவர் கொலையில் காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ஜி கர் மருத்துவமனையை சூறையாடியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்... குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.... இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது... மேலும், உறைவிட மருத்துவர்களின் பணி நேரம் 36 மணி நேரம் என்பதில் மாற்றம் தேவை... சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க, சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மசோதா 2019-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்