நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் பாலியல் கொலை - சாலையில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்ட மம்தா
இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி வேண்டும் என தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்காததற்கு பொறுப்பேற்று, மேற்குவங்க முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஏராளமான இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் இந்த பேரணி நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.
Next Story