கிளைமாக்ஸை நெருங்கும் கொடநாடு கேஸ்..! - பங்களா உள்ளே நுழைய ரெடியாகும் நீதிபதி..?
கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கோரி குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர், கொலை, கொள்ளை சம்பவம் நடந்த கொடநாடு பங்களாவை மாவட்ட அமர்வு நீதிபதி நேரில் ஆய்வு செய்ய சம்மதம் தெரிவித்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்யக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் காதர், இந்த வழக்கை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story