கேரளாவில் மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்.. தீவிர வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகள்

x

கேரளாவில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுவதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தமாக 194 பேர் போட்டியிடுகின்றனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 இடங்களிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் மாணி கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அனைத்து தொகுதிகளிலும் மூன்று கூட்டணிகள் போட்டியிடுவதால் நேரடியாக மும்முணை போட்டி நிலவுகிறது. இதனால், வேட்பாளர்கள், கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு பெற உள்ளதால், இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்