துண்டு சீட்டில் எழுதி தந்த மக்கள்.. பார்த்ததும் பாஜக வேட்பாளர் சொன்ன சேதி
எந்த நேரம் அழைத்தாலும் தொகுதி மக்களுக்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பணியாற்றுவேன் என்று கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் ஆதரவு திரட்டினார்.
கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் அடுத்த திருக்கூர்ணம், ஆர்.வெள்ளோடு, கொல்லிப்பட்டி, கோட்டா நத்தம் ஆகிய பகுதிகளில் செந்தில்நாதன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவரிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளைத் துண்டுச் சீட்டில் எழுதித் தந்த நிலையில், தனக்கு வாக்களித்தால் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.
Next Story