கார்த்தி சிதம்பரம் Vs அருண் நேரு... பதிலுக்கு பதில்... தீ பொறி பறக்க விவாதம்

x

திருச்சிக்கு மெட்ரோ ரயில் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும், திமுக எம்பி அருண் நேருவும் சமூக வலைதளங்கள் மூலம் விவாதம் நடத்தியுள்ளனர்.

திருச்சி மெட்ரோ திட்டத்துக்கு ஆரம்ப கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் 11 ஆயிரம் கோடி செலவாகும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை மேற்கோள்காட்டி, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த பெரம்பலூர் தொகுதி திமுக எம்பி அருண் நேரு, அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சியை சமாளிக்க மெட்ரோ போன்ற நவீன உட்கட்டமைப்பு தேவை என பதிலளித்தார்.

சென்னை மெட்ரோவுக்கு 566 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருச்சி நகரம் எப்படி மெட்ரோ சேவையை சமாளிக்கும் என்றும் கார்த்தி சிதம்பரம் வினவியிருந்தார்.

மெட்ரோ ரயில் திட்டங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இயக்கப்படவில்லை என்றும் மக்களின் எளிமையான பயணத்திற்காக கொண்டு வரப்பட்டதாக அருண் நேரு பதிலளித்தார்.

மெட்ரோ சேவை மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்றும், திட்டங்களை செயல்படுத்தும் முன் ஆலோசனை மேற்கொள்வது ஆரோக்கியமான விஷயம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

நகரப் பகுதியில் இருந்து ஊரக பகுதியை இணைப்பதில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்படுகிறது என்றும், எனவே, மெட்ரோவின் தேவை என்பது மிக முக்கியமானதாகும் என அருண் நேரு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்