புதிய மசோதா.. தொழிலதிபர்கள் அச்சம்
வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்படும் என, கர்நாடக அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சி மற்றும் டி கிரேடு அரசுப் பணிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் புதிய மசோதா குறித்து,
கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தி, குழப்பத்தைத் தீர்த்து, கன்னடர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வோம் என்று கர்நாடக தொழிற்சாலை துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார்.
இந்த மசோதா தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டு குழப்பங்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்
முதல்வருடன் முழுமையாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.