`கன்னடர்களுக்கு 70%, ஹரியானாவில் 75%...' என்ன சொல்ல போகிறது உச்சநீதிமன்றம்

x

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்தும் சட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கன்னடர்கள் இதனை வரவேற்றாலும், சுற்றியிருக்கும் மாநிலங்களில் எதிர்ப்பு குரலும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே சட்டரீதியாக இந்த சட்டம் செல்லுமா...? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரியானாவில் தனியார் துறையில் மாதம் 30 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் வாங்கும் வேலைகளில் 75% வேலையை உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என 2020-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம், அரியானா அரசு சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி அதை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அரியானா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்