அன்று வந்து போன ராகுல்.. இன்று PM மோடி... இரவு பகலாக தியானம்... குமரி வரும் காரணம் இதுதானா..!
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை தேசியத் தலைவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
தென் கோடி எல்லையான குமரிக்கடற்கரையில் அமைந்திருந்த பாறையை கண்டு வியந்த விவேகானந்தர், அங்கு நீந்தியே சென்று 3 நாட்கள் தியானம் செய்த வரலாற்றைத் தொடர்ந்து விவேகானந்தர் பாறை உருவெடுத்தது. விவேகனாந்தரின் வரலாற்றை பேசும் இந்த பாறை தற்போது அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குவதற்கு முன், விவேகனாந்தர் நினைவுப்பாறைக்கு சென்று மரியாதை செலுத்தி, அதன் பின்னரே தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில், பரபரக்கும் அரசியல் சூழலில் வரும் 30ம் தேதி தமிழ்நாடு வருகைத் தரும் பிரதமர் மோடி, விவேகானந்தர் பாறைக்கு சென்று அங்கு தியானம் மேற்கொள்ளவுள்ளார். 30ம் தேதி மாலை முதல் தியானத்தை தொடங்கும் அவர் ஜூன் 1ம் தேதி மாலை வரை 3 நாட்களுக்கு தியானம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.