திடீர் முற்றுகை.. சாதுர்யமாக கையாண்ட கனிமொழி MP
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்காததை கண்டித்து, தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழியை மீனவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தருவைகுளம் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சென்றனர். அவர்களை, பெண்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் முற்றுகையிட்டனர். மேலும், இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, மத்திய அரசிடம் பேசி மீனவர்களை மீட்க, தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருவதாக கனிமொழி தெரிவித்தார்.
Next Story