"இந்து தேசம்".. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்கனா

x

1947ல் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது, ஏன் இந்தியா 'இந்து ராஷ்டிரம் என அறிவிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார், நடிகை கங்கனா ரணாவத்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளராக மக்களவை தேர்தலில் போட்டியிடும் கங்கனா ரணாவத், மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசி வரும் அவர் தற்போது மற்றுமொரு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய கங்கனா, 2014ல் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

சிந்திக்கும் சுதந்திரம் - சனாதன சுதந்திரம் - மத சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என்ற கூறிய கங்கனா, இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம் அது என்றும் சூளுரைத்தார். கங்கனாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்