"பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது.." - ஏன்? - ஆவேசமாக விளக்கிய தமிழிசை
"காமராஜரை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.. பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது.." - ஏன்? - ஆவேசமாக விளக்கிய தமிழிசை
காமராஜரைப் பற்றி பேச கொண்டாட, பாஜகவுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில், 'காமராஜர் வாழ்க்கை வரலாறு' குறித்த திரைப்படம் திரையிடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் அமைச்சர் ஹெச்.விஹண்டே உள்ளிட்டோர் பார்வையிட்டனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.வி,ஹண்டே, காமராஜரை கலந்தாலோசிக்காமல் எமர்ஜென்சியை இந்திரா காந்தி கொண்டு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், காமராஜரைப் பற்றி பேச காங்கிரசுக்கும் ஸ்டாலினுக்கும் உரிமையே இல்லை என்றார்.
Next Story