"விருந்து வச்சி... வெச்ச ஆப்பு ஜோதிமணிக்கு சீட் கிடையாது" கரூரில் களேபரம் | Jothimani
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தான்தோன்றிமலை பகுதியில் தேர்தல் தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில், கரூர் தொகுதியை ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜோதிமணி தொகுதியில் சரிவர பணியாற்றாமலும், பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாத காரணத்தாலும், கூட்டணி கட்சிகளிடமும் வெறுப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் தொகுதி முழுவதும் அவருக்கு பெரும் அதிருப்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Next Story