"தாமரை எங்கும் உள்ளது.., இது ஒரு பான் இந்தியா கட்சி" - ஜே.பி.நட்டா சூளுரை

x

டெல்லி பாரத் மண்டபத்தில், பாஜக தேசிய பொதுக்குழுவின் முதல்நாள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடக்க உரை ஆற்றிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வரும் மக்களவைத் தேர்தலில் தனியாக 370 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணியாக 400 இடங்களுக்கு அதிகமாகவும் கைப்பற்ற வேண்டும் என்றார். முன்பு, 5 மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி செய்த‌தாகவும், தற்போது பாஜக மட்டுமே 12 மாநிலங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக 17 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், 38.5 சதவீத வாக்குகள் மற்றும் 77 எம்எல்ஏக்களை பெற்று வளர்ந்துள்ளதாகவும், அடுத்த முறை ஆட்சியை பிடிக்கும் என்றும் ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்தார். தென்னிந்தியாவில் கட்சியின் இருப்பு குறைவாக உள்ளது என்ற வாதத்தை மறுத்த ஜே.பி.நட்டா, தாமரை எங்கும் உள்ளது என்றும், இது ஒரு பான்-இந்தியா கட்சி என்றும் சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்