22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை.. பாயிண்டுகளை அடுக்கிய ஜே.பி நட்டா.. அதிர்ந்த மக்களவை
பிரதமர் மோடியின் ஆட்சியில் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டா பதிலுரை வழங்கி உரையாற்றினார். 2013-14இல் 33 ஆயிரத்து 278 கோடி ரூபாயாக இருந்த சுகாதாரத் துறை பட்ஜெட் தற்போது 90 ஆயிரத்து 958 கோடி ரூபாயாக 164 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் நாட்டில் ஒட்டுமொத்தமாக 387 மருத்துவ
கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இது 731 ஆக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி ஆட்சியில் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவற்றில் 18 செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், நான்கு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆயுஷ்மான்
பாரத் திட்டத்தின் கீழ் 12 கோடி குடும்பங்களை சேர்ந்த 55 கோடி மக்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட நட்டா, இவை தவிர நாடு முழுவதும் இதுவரை 1.73 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்