"அன்புமணி இவங்களாலதான் சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது.." - கொதித்து பேசிய ஜவாஹிருல்லா

x

சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி தென்னூர் பகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சிஏஏ சட்டம் மக்களவையில் பாஜகவின் பலத்தைக் கொண்டு நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். எனினும், மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், அதிமுகவின் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது வாக்கினால் தான், சிஏஏ நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்