ஜம்மு தேர்தல் - இரவு 11 மணி நிலவரம்.. தேர்தல் அதிகாரிகளே எதிர்பாரா சர்ப்ரைஸ்
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரவு 11.30 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் 11.30 மணி நிலவரம் படி தோராயமாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Next Story