சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி - வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

மானிய கோரிக்கை விவாதத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார். ஊரகப்பகுதிகளில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள், 140 கோடி ரூபாய் செலவில் 500 சிறு பாலங்கள் கட்டப்படும் என்றார். 500 அரசுப் பள்ளிகளில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், 500 கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு கட்டடங்கள் கட்டப்படும் என்றும் கூறினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளை கண்காணிக்க 480 புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், மேய்க்கால் நிலங்களில் கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகள் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 250 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் புதிய சிறு குளங்கள் அமைக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்