எம்ஏ தமிழ் முடித்த பட்டதாரிகளுக்கு அமைச்சர் சொன்ன தகவல்
விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சாமிநாதன் வழிபாடு நடத்தினார். இதனையடுத்து, தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சாமிநாதன், காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார் எனவும், டிஎன்பிஎஸ்சி மூலம் எம்ஏ தமிழ் முடித்த பட்டதாரிகளை உதவி இயக்குநர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story